வண்ணான்குளத்தின் மடையை காணவில்லை-பா.ஜனதா நிர்வாகிகள் போலீசில் புகார்
ஆவுடையார்கோவில் அருகே வண்ணான்குளத்தின் மடையை காணவில்லை என பா.ஜனதா நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர்.
புதுக்கோட்டை
ஆவுடையார் கோவில் தாலுகாவிற்குட்பட்ட கரூர் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா ஒன்றிய தலைவர் நாணல் ரகுபதி தலைமையிலான நிர்வாகிகள் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமணியிடம் நடிகர் வடிவேலு காமெடி பாணியில் கட்டிய மடையை காணவில்லை என்று புகார் அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கரூர் அருகே துஞ்சனூர் ஊராட்சி அவத்தினி கோட்டை கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வண்ணான் குளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக மடை ஒன்று கட்டப்பட்டதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்கில் உள்ளது. ஆனால் அந்த குளத்தில் மடையில்லை. எனவே அந்த மடையை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story