ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு சொகுசு கார் பரிசு - ரூ.3 லட்சம் மோசடி


ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு சொகுசு கார் பரிசு - ரூ.3 லட்சம் மோசடி
x

திருச்சி அருகே சொகுசு கார் பரிசு விழுந்து இருப்பதாக கூறி கேபிள் டி.வி. உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி

திருச்சி:

திருச்சி மாவட்டம், துறையூர் அழகாபுரியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). இவர் அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் ஆன்-லைன் மூலம் வாசனை திரவியம் ஆர்டர் செய்துள்ளார்.

அப்போது இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் நீங்கள் ஆர்டர் செய்துள்ள பொருளுக்கு ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளது. பணம் வேண்டாம் என்றால் சொகுசு காரை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அத்துடன் காரை பெற, சில கட்டணங்களை செலுத்தும்படி அவ்வப்போது கூறி ரூ.3 லட்சம் வரை அந்த வாலிபர் ஆன்-லைன் மூலம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி பரிசு எதுவும் கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சந்திரசேகரனிடம் பேசி பணத்தை பெற்ற நபர் டெல்லியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சைபர்கிரைம் போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.


Next Story