கோபியில் ஆசிரியரை காதலித்து கரம் பிடித்த ஆசிரியை; பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


கோபியில் ஆசிரியரை காதலித்து கரம் பிடித்த ஆசிரியை; பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x

கோபியில் ஆசிரியரை காதலித்து கரம் பிடித்த ஆசிரியை பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

ஈரோடு

கடத்தூர்

கோபியில் ஆசிரியரை காதலித்து கரம் பிடித்த ஆசிரியை பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

ஆசிரியை

கோபி அருகே உள்ள திங்களூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் தமிழரசு (வயது 29). இவர் எம்.எஸ்சி. படித்துவிட்டு விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள மேற்கு தச்சம்பாளையத்தை சேர்ந்தவர் கேசவன். அவருடைய மகள் நிதனி (22). இவர் பி.எஸ்சி. படித்துவிட்டு குன்னத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தமிழரசுவுக்கும், நிதனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீசில் தஞ்சம்

இதனால் தமிழரசுவும், நிதனியும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். பின்னர் திங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் நேற்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோபியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது பெற்றோர்களை போலீஸ் நிலையம் வரவழைத்து அனைவரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


Next Story