லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
x

வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சைதாப்பேட்டை பி.டி.சி.ரோட்டில் உள்ள இனிப்பு கடை அருகே நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஜாபர் (வயது 37) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 51 லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story