ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி
வேலூர்
குடியாத்தத்தை அடுத்த காவனூர் - லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே கே.வி.குப்பம் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கி சிகிச்சைபெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கே.வி.குப்பம், ரெட்டியார் தெரு பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 60) என்பதும், லாரி டிரைவராக பணிபுரிந்து, தற்போது வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
Related Tags :
Next Story