உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சி பட்டறை


உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சி பட்டறை
x

ஏர்வாடியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சி பட்டறை நடந்தது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நெல்லை மண்டல உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலாண்மை பயிற்சி பட்டறை நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு பேசினார். உள்ளாட்சி உறுப்பினர் வேலை என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ஷபிக் அகமது, ஆளுமை வளர்ச்சி என்ற தலைப்பில் மாநில பொறுப்பாளர் கரீம், சோஷியல் மீடியா என்ற தலைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மத்தின் ஆகியோர் பேசினார்கள்.

இதில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். முடிவில், தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் உமர் நன்றி கூறினார்.


Next Story