ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
ஒட்டன்சத்திரத்தில், ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக 4, 5-ம் வகுப்பு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வீ.இளங்கோவன் தலைமை தாங்கி பேசினார். துணை முதல்வர் அன்புமுத்து முன்னிலை வகித்தார்.முகாமில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமுக அறிவியல் ஆகிய பாடங்களில் மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் 294 ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சி குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் கூறுகையில், 2023-24-ம் கல்வி ஆண்டு முதல் 4, 5 வகுப்புகளுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வட்டார அளவிலான பயிற்சி, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது என்றார்.