திங்கள்சந்தையில் மது விற்றவர் கைது
திங்கள்சந்தையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிதனிஸ்லாஸ் மற்றும் போலீசார் திங்கள்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திங்கள்சந்தை பறையன் விளை அருகே சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனையிட்ட போது மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பறையன்விளையை சேர்ந்த வினு (வயது 46) என்பதும் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து வினுவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 105 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story