காங்கயத்தில் மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.


காங்கயத்தில் மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
x

காங்கயத்தில் மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர்

காங்கயத்தில் மூதாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

மூதாட்டி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 48). இவரது தாயார் வள்ளியாத்தாள் (75). இவர் தனக்கு சொந்தமான கோவில்காட்டு தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்து ஆடு, மாடு மேய்த்து வந்தார். பாலசுப்பிரமணி தினமும் காலை, மாலை தனது தாயாரை பார்த்து விட்டு வருவது வழக்கம். கடந்த 7-6-2015 அன்று மாலை 5.45 மணிக்கு பாலசுப்பிரமணி தனது தாயாரை பார்க்க வீட்டுக்கு சென்றார்.

அங்கு வீட்டுக்குள் மின்விசிறி வயரால் கைகள் நாற்காலியுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், தலையில் ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் வள்ளியாத்தாள் கிடந்தார். அவர் அணிந்திருந்த ¾ பவுன் தங்க கம்மலை காணவில்லை. இதையடுத்து வள்ளியாத்தாளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நகை பறிப்பு

விசாரணையில், வள்ளியாத்தாள் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் ஆடு மேய்க்கும் காங்கயம், கந்தாங்கண்ணி ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராசு (52) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் சம்பவத்தன்று மாலை தண்ணீர் கேட்பது போல் வள்ளியாத்தாள் வீட்டுக்கு சென்ற ராசு, வள்ளியாத்தாளை தாக்கி கையை நாற்காலியுடன் சேர்த்து வயரால் கட்டி விட்டு அவர் அணிந்திருந்த நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராசுவை காங்கயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வள்ளியாத்தாள் 10 நாட்கள் கழித்து இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. வள்ளியாத்தாளின் மரணம் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு அதன்காரணமாக இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கொலை குற்றத்துக்கு ராசுவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், வீடு புகுந்து கொடூரமாக தாக்கிய குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த காங்கயம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.

-----------

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராசு.


Next Story