எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முகவர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் கிளை தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜயபானி, முன்னாள் தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், அனைத்து விண்ணப்பங்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும், பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பணப்பலன்கள்
அதேபோல் முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த கோரியும், நேரடி முகவர்களுக்கு கூடுதல் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், முகவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்குவதோடு, வீட்டு வசதி கடனை 5 சதவீத வட்டியில் தர வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் துணைத்தலைவர்கள் இளங்கேர், நடராஜன், இணை செயலாளர்கள் அமுதன், பாலக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.