நடுரோட்டில் செத்து கிடந்த சிறுத்தை

நடுரோட்டில் செத்து கிடந்த சிறுத்தை
x

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஆந்திர மாநிலம் நாய்க்கனேரி வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சிறுத்தை ஒன்று செத்து கிடந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஆந்திர மாநிலம் நாய்க்கனேரி வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சிறுத்தை ஒன்று செத்து கிடந்தது.

அந்த வழியாக காரில் சென்றவர்கள் பார்த்து தமிழக எல்லையில் உள்ள பத்தலப் பல்லி போலீஸ் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இறந்து கிடந்தது குட்டி பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. அந்த சிறுத்தையின் உடலில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை.

குட்டி பெண் சிறுத்தையானது இரை தேடி ஆந்திர வனப் பகுதி மலைப்பாதையில் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இடுப்பு பகுதியில் படுகாயமடைந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story