குடும்ப நலன் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
ஆற்காட்டில் குடும்ப நலன் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள ஆற்காடு மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரியில் குடும்ப நலன் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை தாங்கி, வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கரன், சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடும்ப நலன் குறித்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் மாணவிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
முகாமில் ராணிப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு பிரீத்தி, கமலேஷ், சாரதி கல்லூரி முதல்வர் சிவசக்தி, பள்ளி முதல்வர் ஜாய்ஸ் இன்ப குமாரி, அகாடமி இயக்குனர் கோமதி, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story