சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மாலை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி, பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு அதுபோன்ற குற்றங்களில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதனகோபால், அனைவரையும் வரவேற்றார். தலைமை பொறியாளர் வசுநாயர் பிரேம்குமார் வாழ்த்துரை வழங்கினார். சட்ட கருத்துரையாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல் திலகவதியும், மாவட்ட சிறப்பு நீதிபதி பாக்யஜோதியும் கருத்துரை வழங்கினர். அப்போது விசாகா வழக்கின் சாராம்சம் மற்றும் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கி கூறினர்.

இம்முகாமில் மின்சார வாரிய பணியாளர்கள்150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பஷீர் நன்றி கூறினார்.


Next Story