சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் தெய்வா திருமண மண்டபத்தில், திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவும், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயமும் இணைந்து 'பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள்' என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது. நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான வஷித்குமார் தலைமை உரையாற்றினார். முன்னதாக கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். இதில் திருச்செந்தூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துலெட்சுமி கலந்து கொண்டு பெண்கள் உரிமைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பொது மக்களுக்கு மரக்கன்றுகளும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் துணி பையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன், செயலாளர் எட்வர்டு, அரசு வக்கீல் சாத்ராக், வக்கீல்கள் நடேச ஆதித்தன், சீத்தாலெட்சுமி, கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிராம உதயம் பொறுப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story