சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

தச்சநல்லூரில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் மக்கள் கோர்ட்டு நீதிபதி பங்கேற்றார்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து, தச்சநல்லூர் அங்கன்வாடி மையத்தில் வறுமை ஒழிப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின. நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா தலைமை தாங்கி வறுமை ஒழிப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். இதில் பகுதி பொறுப்பாளர்கள் செந்தில்குமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மாதவி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.


Next Story