சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

தென்காசி

சிவகிரி:

சிவகிரி நீதிமன்றம் சார்பில், புளியங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக புதிய புதிய சட்டங்கள் வருகிறது. ஒருவர் அறியாமையால் தவறு செய்தாலும் அவர் செய்தது குற்றம் தான். எனவே குழந்தைகள் படித்து நல்ல நிலைமைக்கு உயர வேண்டும், என்றார்.

இதில் வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story