சட்ட விழிப்புணர்வு முகாம்
கோபாலசமுத்திரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் இணைந்து கோபாலசமுத்திரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்றார். கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் ஜெபமணி, ஆறுமுகத்தாய் ஆகியோர் பேசினர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி செந்தில் முரளி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டது.