சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

செங்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கற்குடி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது. வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி எம்.சுனில்ராஜா தலைமை தாங்கினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன், துணைத்தலைவா் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். பணி நிறைவு தனிப்பிரிவு ஆய்வாளர் அண்ணாமலை வரவேற்றார். வழக்கறிஞா்கள் சுடர் முத்தையா, ராமலிங்கம், கார்த்திகைராஜன், பாத்திமா சித்திக் ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கவுரையாற்றினா்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞா்கள் மாலதி, சாமி, குமார், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் குத்தாலிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வடகாசி, வசந்தகாளி, திருமலைக்குமார், வேலம்மாள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் இசக்கி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணின் செய்திருந்தார்.


Next Story