வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் இன்றி வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இது குறித்து விருத்தாசலம் பொதுப்பணித்துறை அலுவலகத்திடம் வக்கீல்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதற்கு மூத்த வக்கீல் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க செயலாளர்கள் மாய மணிகண்டன், இளையராஜா, பொருளாளர் ராகவன், வக்கீல்கள் விஜயகுமார், மகேந்திரவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரய்யா, பழமலை, ராஜா, சிவசங்கர், பழனிமுத்து, புஷ்பதேவன், காந்தி, அப்துல்லா, மோகன், ஜெயபிரகாஷ், குமரகுரு, கணபதி, செல்வி, ஜெயஸ்ரீ, ராஜகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்றத்திற்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தரக்கோரியும், பொதுப்பணித்துறையை கண்டித்தும் கோஷமிட்டனர்.


Next Story