தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு


தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் பகுதியில் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் மேல்மலையனூர்-செஞ்சி சாலையில் மேலச்சேரி அருகில் உள்ள வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் சென்று வருவதால் பொதுமக்கள் இவ்வழியாக செல்லாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும் என போலீஸ், வருவாய், தீயணைப்பு ஆகிய துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பெய்த மழையால் இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் முதல்-அமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story