மொடக்குறிச்சி அருகே லாரி மோதி தொழிலாளி சாவு
மொடக்குறிச்சி அருகே லாரி மோதி தொழிலாளி சாவு
ஈரோடு
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி தம்பிரான் வலசு பகுதியை சேர்ந்தவர் யோககணபதி (வயது 50). மரம் ஏறும் தொழிலாளி. இவர் எழுமாத்தூர் பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு நஞ்சை ஊத்துக்குளி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் அருகே சென்றபோது எதிரே ஒரு லாரி வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட யோக கணபதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story