விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு


விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு
x
தினத்தந்தி 20 July 2023 12:45 AM IST (Updated: 20 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு திருவாலங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கதம்பவள்ளி சின்னையன் தலைமை தாங்கினார். தி.மு.க. ஊராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாலங்காடு கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். இதில் குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் குறுவை தொகுப்பு இடுபொருட்களை வழங்கினர். விழாவில் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்லக்குட்டி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா, குத்தாலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் செந்தில், உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story