அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்


அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
x

அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே காமாட்சியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் காமாட்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். விராலிமலை ஒன்றியம், மலம்பட்டியில் செல்வ விநாயகர், பகவதி அம்மன் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் குடங்களில் உள்ள புனிதநீரை சிவாச்சாரியார்கள் பகவதி அம்மன், செல்வவிநாயகர் ஆகிய மூலஸ்தான விமான கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமத்தில் சவுந்தரநாயகி அம்பிகா சமேத செங்கழனி திருமேனிநாதர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story