அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மூங்கில்துறைப்பட்டு அருகே அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர்காட்டுக்கொட்டாய் பகுதி மக்கள், புதிதாக அம்மச்சார் அம்மன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் நடந்ததும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9 மணி அளவில் கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீதும் புனிதநீர் தௌிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.