கிருஷ்ணகிரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


கிருஷ்ணகிரியில்  சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று சமூகநீதி நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்து கொண்டனர். கலெக்டர் உறுதிமொழியை படிக்க, அனைவரும் திரும்ப படித்து உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story