கிருஷ்ண ஜெயந்தி விழா
மரிமாணிகுப்பம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த மரிமாணிகுப்பம் கிராமத்தில் மூன்றாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெருமாள் கோவிலில் விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ராதா, ருக்மணி சமேதரருக்கும் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் கே.துளசிராமன், துணைத் தலைவர் ஞானமுத்து, கவுன்சிலர் திலகா கோபி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.தேவன், முன்னாள் துணைத் தலைவர் மகாலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் கே.குப்பன், முன்னாள் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் எஸ்.மோகன், வார்டு உறுப்பினர்கள் எஸ்.சக்தி, பி.சமீராபாபு, எ.நதியாஅர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கிருஷ்ணர், ராதா ருக்மணி திருக்கல்யாணம் நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்து சாமி கும்பிட்டனர். தொடர்ந்து அன்னதானம், உறியடி நடந்தது. மரிமாணிகுப்பத்தில் இருந்து தோட்டிக்குட்டை வரையில் திருவீதி உலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, சிவானந்தம், சென்றாயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.