கோவில்பட்டி வ. உ.சி. அரசு பள்ளியில்மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
கோவில்பட்டி வ. உ.சி. அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாம்
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை, கல்வி உதவித் தொகை படிவம், மூன்று சக்கர வாகனம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் ஆறு வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது.
முகாமினை கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் முத்தம்மாள், பத்மாவதி, பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜசெல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் ஜோஸ்வா, பாலசுப்பிரமணியன், மனோஜ் , மாணவியருக்கு பரிசோதனை செய்து மருத்துவப் பணிகளை செய்தனர். முகாமில் மாவட்ட அலுவலர்கள் ஜெயபிரகாஷ்ராஜன், மேரி டயனா ஜெயந்தி ஆகியோர் மேற்பார்வை செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி ஆலோசனையின் பேரில், வட்டார வளமை மேற்பார்வையாளர் நட்டாத்தி செய்திருந்தார்.
ஆண்டு விழா
ேமலும், இப்பள்ளி பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட இடைநிலை அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் மற்றும் கல்வி மாவட்ட தொடக்க நிலை அலுவலர் மேரி டையானா ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பொன்னு நேச்சுரல் புட் ப்ராடக்ட்ஸ் உரிமையாளர் பொன்னுச்சாமி பரஞ்சோதி ரூ.5½ லட்சம் நிதியை பள்ளி வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
இவ்விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.