வெளிநாட்டுக்கு சென்று வேலை கிடைக்காமல் ஏமாற்றம்: கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை


வெளிநாட்டுக்கு சென்று வேலை கிடைக்காமல் ஏமாற்றம்: கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 May 2023 12:36 AM IST (Updated: 30 May 2023 12:11 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டுக்கு சென்று வேலை கிடைக்காததால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

வெளிநாட்டுக்கு சென்று வேலை கிடைக்காததால் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொத்தனார்

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தெற்கு தெரு பண்ணையார் விளையை சேர்ந்தவர் சகாயராஜ் ஜெகதீஸ் (வயது 29), கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவருடைய தாயார் அமுதா. கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தாயாருடன் வசித்த சகாயராஜ் ஜெகதீஸ் கஷ்டப்பட்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றார். அங்கு சுற்றுலா விசாவில் சென்றதால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதனால் வெளிநாட்டில் மிகவும் கஷ்டப்பட்டு நாட்களை கழித்துள்ளார். பின்னர் எப்படியோ வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு வந்தார். பணம் செலவழித்தும் வெளிநாட்டுக்கு சென்று வேலை கிடைக்காத ஏமாற்றத்தில் அவர் மனவேதனையில் இருந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டில் விஷம் குடித்த நிலையில் அவர் மயங்கி கிடந்தார். அப்போது அங்கு சகாயராஜ் ஜெகதீஸின் தங்கை வந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சகாயராஜ் ஜெகதீஸை மீட்டு சிகிச்சைக்காக தோவாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பிறகு மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story