கொப்பரை தேங்காய் ஏலம்


கொப்பரை தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொப்பரை தேங்காய் ஏலம்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 75 விவசாயிகள் 447 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காயை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரளாவை சேர்ந்த 7 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 245 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோவுக்கு 74 ரூபாய் 30 காசுகள் முதல் 82 ரூபாய் 15 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. 202 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோவுக்கு 55 ரூபாய் 30 காசுகள் முதல் 71 ரூபாய் 50 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. வெளி சந்தையில் கொப்பரை தேங்காய் விலை குறைந்ததன் காரணமாகவும், எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாகவும் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 1 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும் 157 மூட்டை கொப்பரை வரத்து குறைந்துள்ளது. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.


Next Story