திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய கால்நடை தடுப்பு திட்டத்தின்கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கியது. இந்த திட்டமானது வருகிற 21-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் கால்நடை துறை சார்பில் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
திருவண்ணமாலை வேங்கிக்காலில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தார். விவசாயிகள் தங்கள் மாடுகளுடன் வந்து அதற்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், உதவி இயக்குனர்கள் ஜெயக்குமார், ராமன், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவக் குழு உதவி டாக்டர்கள் ராஜ்குமார், அருண், லட்சுமிபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.