பிளஸ்-2 மாணவி கடத்தல்
கடலூாில் பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டாா்.
கடலூர்
கடலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த போது மாணவிக்கும், கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவியை, அசோக்குமார் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் உறவினர், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்தி சென்ற அசோக்குமாரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story