கல்லூரி மாணவி உள்பட 2 பேர் கடத்தல்


கல்லூரி மாணவி உள்பட 2 பேர் கடத்தல்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் கடத்தப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி கல்லூரி ஒன்றில் முதலாம் ஆணடு படித்து வந்தார். இவர் கடந்த 6-ந் தேதி கல்லூரி செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர் அதில், சென்னையை சேர்ந்த அஸ்வின் என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல கிருஷ்ணகிரி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்து உறவினர்கள் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதில், திருவண்ணாமலையை சேர்ந்த நவீன் (வயது 19) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story