பிளஸ்-1 மாணவி கடத்தல்; மாணவருக்கு வலைவீச்சு
ஓசூரில் பிளஸ்-1 மாணவி கடத்திய மாணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 6-ந் தேதி திடீரென மாயமானார். இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் தனது மகளை, அவருடன் பிளஸ்-1 படித்து வரும் 16 வயது சிறுவன், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவன் மற்றும் மாணவியை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story