கருணாநிதி பிறந்த நாள் விழாவை


கருணாநிதி பிறந்த நாள் விழாவை
x

தர்மபுரி மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, வக்கீல் மணி, காளியப்பன், துரைசாமி, மாதேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி, முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை தி.மு.க. சார்பில் தர்மபுரி மேற்கு மாவட்டம் முழுவதும் வருகிற 3-ந் தேதி சிறப்பாக கொண்டாட வேண்டும். விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் கட்சியின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கியும், மாணவ-மாணவிகள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் தெருமுனை பிரசாரம், திண்ணை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த ஓராண்டில் நிறைவேற்றிய சாதனை திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கோபால், செல்வராஜ், அன்பழகன், செல்வராஜி, குட்டி, குமரவேல், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், பேரூராட்சி செயலாளர்கள் வீரமணி, சண்முகம், வெங்கடேசன், சீனிவாசன் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story