ஆதிபராசக்தி கோவிலுக்கு கஞ்சி கலய ஊர்வலம்


ஆதிபராசக்தி கோவிலுக்கு கஞ்சி கலய ஊர்வலம்
x

திருவாரூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

கஞ்சி கலய ஊர்வலம்

திருவாரூர் பிடாரி கோவில் தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 10-ந்தேதி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.

இதனை தொடர்ந்து நேற்று ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. முன்னதாக ஆயிரக்கணக்கான பெண்கள் திருவாரூர் காகிதகார தெருவில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்து கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்

ஊர்வலம் வடக்குவீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது. இதையடுத்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவில் கருவறைக்கு சென்று ஆதிபராசக்தி அம்மனுக்கு நேரடியாக பாலாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story