காளியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்


காளியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்
x

காளியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நடந்தது.

கரூர்

தோகைமலை அருகே டி.இடையப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேகம் முடிந்து 48-வது நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story