மண்டல அளவிலான கபடி போட்டிகள்
மண்டல அளவிலான ஆண்களுக்கான கபடிப்போட்டிகள் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவிலான ஆண்களுக்கான கபடிப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்றார். மேனாள் துணை வேந்தரும் ஸ்ரீராஜராஜன் கல்விக்குழும ஆலோசகருமான சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் கலந்து கொண்டார்.
போட்டிகளில் 19 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும், கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி அணியும் மோதின. இதில் செயின்ட் ஜோசப் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2-வது இடத்தை ஹிந்துஸ்தான் கல்லூரி அணியும், 3-வது இடத்தை காரைக்குடி கிட் அண்ட் கிம் என்ஜினீயரிங் கல்லூரி அணியும், 4-வது இடத்தை கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணியும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகளை ஸ்ரீராஜ ராஜன் கல்விக்குழுமத்தின் ஆலோசகர் சுப்பையா வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சுந்தர், கல்லூரி துணைமுதல்வர் மகாலிங்க சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள், பி.ஆர்.ஓ. ஏகோஜிராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.