மளிகைக்கடைக்காரரின் வீட்டில் நகை திருட்டு


மளிகைக்கடைக்காரரின் வீட்டில் நகை திருட்டு
x
நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள வரவுரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 67). மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும், வெங்கடேசன் (34) என்ற ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று சேந்தமங்கலம் பெருமாள் கோவிலில் நடைபெற இருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மனோகரன் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று மனோகரனின் உறவினர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மனோகரன் குடும்பத்தினருக்கும், எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க காயினை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தை நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் பார்வையிட்டார். இது பற்றி எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.


Next Story