பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.
ஜமாபந்தி
பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.அய்யம்பேட்டை சரகத்திற்குட்பட்ட 25 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.
இதில் பொதுமக்களிடம் இருந்து 144 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
உதவித்தொகை
இந்த முகாமில் இரண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு முதியோர் உதவி தொகையையும் கலெக்டர் வழங்கினார்.
ஜமாபந்தியில் பயிற்சித் துணை கலெக்டர் விஷ்ணுபிரியா, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருககுமார், திருவையாறு ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் நெடுஞ்செழியன், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ரத்தினவேல், துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
இதேபோல் கும்பகோணம் வருவாய் கிராமங்கள், கிராம நிா்வாக அலுவலா்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு ஜமாபந்தி நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அத்தியூர், சோழபுரம், கோவிலாச்சேரி, குமரன்குடி, தேவனாஞ்சேரி, திருநல்லூர், கல்லூர், அகராதூர் உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 174 மனுக்களை வழங்கினர். இதில் 23 மனுக்களுக்கு உடனடியாாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 151 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், துணை தாசில்தார் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாக்யராஜ் மற்றும் வட்ட வழங்க அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி
பேராவூரணியில் ஜமாபந்தி பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் பிரபாகர் தலைமையிலும், பேராவூரணி தாசில்தார் சுகுமார் முன்னிலையிலும் நடந்தது. இதில், பெருமகளூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 58 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் 20 மனுக்கள் ஏற்கப்பட்டு 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், தலைமை உதவியாளர் பிரேம்குமார், வட்டத்துணை ஆய்வாளர் செந்தில்குமார். மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன், கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.