கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்கப்பட்டது.

திருச்சி

சமயபுரம் அருகே உள்ள சேனிய கல்லுக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீனா என்ற தீனதயாளன். இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் கட்டி இருந்த ஜல்லிக்கட்டு காளையை அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகள் முட்டியதாக தெரிகிறது. இதில் கயிறு அவிழ்ந்த நிலையில் ஜல்லிக்கட்டு காளை வெளியே சென்றபோது அந்தப் பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞர்கள் உதவியுடன் கயிறு மூலம் காளையை உயிருடன் மீட்டனர்.


Next Story