ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு


ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Jan 2024 7:31 AM IST (Updated: 29 Jan 2024 7:38 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் உள்ள முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கவும், அதன் மூலம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது. ஸ்பெயினில் பல்வேறு முதலீட்டாளர்களை தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பதோடு தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.


Next Story