கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணல்
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணல் நடந்தது.
கிருஷ்ணகிரி தேவராஜ் மாங்கூழ் தொழிற்சாலை வளாகத்தில் தி.மு.க.வின் 23 அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன்எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நேர்காணலை நடத்தினார். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர்கள் டேம்.வெங்கடேசன், அரியப்பன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர்கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராசன், சித்ரா சந்திரசேகர், அஸ்லாம், கோதண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் 25 பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்த 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வருகிற 26-ந் தேதி மதியம் 2 மணிக்கு மகளிரணிக்கும், 2.30 மணிக்கு மகளிர் தொண்டரணிக்கும், 3 மணிக்கு இளைஞரணிக்கும், 3.30 மணிக்கு மாணவரணிக்கும், 4 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணிக்கான நேர்காணல் நடைபெறுகிறது.