சர்வதேச யோகா தினம்


சர்வதேச யோகா தினம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சர்வதேச யோகா நிபுணர் பதஞ்சலி யோகா மைய நிறுவனர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகாவின் சிறப்புகள் பற்றி அவர் பேசியதாவது, மாணவர்கள் தினந்தோறும் பயிற்சி செய்தால் என்னாலும் புத்துணர்ச்சியுடன் உங்கள் செயல்களை செய்ய முடியும் என்றார். முன்னதாக கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம் வரவேற்றார். ஐ.கியூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஷாகின் வாழ்த்துரை வழங்கினார். யோகா பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார். இதில் செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா, கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசும்போது, மாணவர்களும் பேராசிரியர்களும் நாள்தோறும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தற்போது சர்வதேச யோகா தினத்தில் நமது கல்லூரியில் மாணவ-மாணவிகளுடன் இணைந்து பேராசிரியர்களும், ஆசிரியர்களும், அலுவலக பொறுப்பாளர்களும் யோகாவில் இணைந்திருப்பது பாராட்டக் கூடியது. இந்த நேரத்தில் அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பேசினார்கள். இதற்கான ஏற்பாடுகள் முழுவதையும் கல்லூரி வளாகத்தில் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது செய்திருந்தார்.


Next Story