சர்வதேச தாய்மொழி தினம்: தமிழின் புகழை திக்கெங்கும் கொண்டு செல்வோம் - அண்ணாமலை


சர்வதேச தாய்மொழி தினம்: தமிழின் புகழை திக்கெங்கும் கொண்டு செல்வோம் - அண்ணாமலை
x

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு, சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துக்களை பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பில் நடைபெற்ற, பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

பன்மொழி கலாச்சாரத்தை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும், பல மொழிகள் பேசும் மக்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் நோக்கத்திலும், இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்" என்றார் பாரதியார்.

தமிழின் புகழை திக்கெங்கும் கொண்டு செல்வோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு, சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





Next Story