வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமை அதிகரிக்கும்


வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமை அதிகரிக்கும்
x

வீடு, வாகன கடனுக்கான வட்டி வகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

அரியலூர்

வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரிக்கும்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

ஏழை மக்களை பாதிக்கும்

அரியலூர் மாவட்டம் திருமழபாடியை சேர்ந்த கணேஷ்:- பணவீக்கத்தை கட்டுப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது வட்டி விகிதம் உயர்வு என்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும். கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதால் மதாந்திர கடன் தவணை செலுத்தும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே கடனுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கூடுதல் வட்டி

அரியலூரை சேர்ந்த கட்டிட வல்லுனர் அறிவானந்தம்:- வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கியில் கடன் பெற்றுள்ளோர் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். உதாரணமாக வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக்கடன் உள்ளிட்ட எந்த கடனாக இருந்தாலும் வட்டி விகிதம் உயரும். இதனால் சாமானிய மக்கள் வீடு கட்ட இயலாத சூழ்நிலை ஏற்படும். வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும்.

வேலையில்லா திண்டாட்டம்

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராஜ்குமார்:- நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உள்ள நிலையில் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது ஏழை, நடுத்தர மக்கள் மீதான சுமையை அதிகரிக்கும். எனவே ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story