புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்


புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்
x

புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆதிகாலத்தில் கடல்பகுதியாக இருந்ததால் இப்பகுதிகளில் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் படிமங்கள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் படிமங்கள், புதைப்படிவ பொருட்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் காணும் வகையில் வாரணவாசி கிராமத்தில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் டைனோசர் முட்டை, கனிம தாது, புதைப்படிவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தினை தினமும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அவர் அருங்காட்சியகம் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டதையும் பார்வையிட்டார். இதேபோன்று அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்தி தரவும், அருங்காட்சியகத்தை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கவும் அறிவுறுத்தியதுடன், அருங்காட்சியகத்திற்கு தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டறிந்தார்.


Next Story