175 பள்ளிகளின் 774 வாகனங்கள் ஆய்வு


175 பள்ளிகளின் 774 வாகனங்கள் ஆய்வு
x

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் 175 பள்ளிகளின் 774 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

விருதுநகர்


விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் 175 பள்ளிகளின் 774 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வு

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வாகனங்களை கலெக்டர் தலைமையில் போலீசார் போக்குவரத்துதுறை, பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் இணைந்து கூட்டாய்வு செய்தனர்.

அதன்படி விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களை சேர்ந்த அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் வட்டாரத்தில் உள்ள 44 பள்ளிகளை சேர்ந்த 215 வாகனங்களும், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள 37 தனியார் பள்ளிகளை சேர்ந்த 171 வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

774 வாகனங்கள்

சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 29 பள்ளிகளை சேர்ந்த 134 வாகனங்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள 65 பள்ளிகளை சேர்ந்த 254 வாகனங்களும் ஆக மொத்தம் 175 பள்ளிகளை சேர்ந்த 774 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.694 வாகனங்கள் முழு தகுதியுடையதாக இருந்தது. 80 வாகனங்கள் சிறு, சிறு குறைகள் உள்ள காரணத்தினால் நிராகரிக்கப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத்துறையினர் செயல் விளக்கம் செய்து காட்டினர். பஸ்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதல் உதவி பயிற்சி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களால் செயல்முறை விளக்கம் நடத்தி காட்டப்பட்டது. பள்ளி வாகன ஊழியர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.


Next Story