புதுச்சத்திரம் அருகேஅணைக்கட்டு, தடுப்பணை தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு


புதுச்சத்திரம் அருகேஅணைக்கட்டு, தடுப்பணை தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:30 AM IST (Updated: 3 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் தூர்வாரும் பணியை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணிகள்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டி கிராமத்தில், வள்ளி அணைக்கட்டு மேல்புறம், கீழ்புறம் மற்றும் வரட்டாறு அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சத்தில் 3.153 கி.மீட்டர் தொலைவிற்கும், வரட்டாறு அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பில் 1.535 கி.மீட்டர் தொலைவிற்கும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பொடங்கம் கிராமத்தில் பொடங்கம் தடுப்பணை மேல்புறம் மற்றும் கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பில் 1.835 கி.மீட்டர் தொலைவிற்கு தூர்வாரும் பணி நடந்து வந்தது.

அதேபோல் தத்தாதிரிபுரத்தில் கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், 1.90 கி.மீ தொலைவிற்கும், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 1.75 கி.மீ தொலைவிற்கும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 10.17 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை விரைந்து முடிக்குமாறு உதவி செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story