திருச்சி மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
திருச்சி மத்திய சிறையில் கைதி திடீரென இறந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, வேதியபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 68). இவர் குற்றவழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்படவே அவரை திருச்சி அரசு மருத்துவமனை சிறைவாசிகள் பிரிவு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire