'சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா': அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் - மாநகராட்சி அறிவுறுத்தல்


சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் - மாநகராட்சி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2022 9:41 PM IST (Updated: 11 Aug 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய அளவில் "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா" என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், அரசுக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் போலீஸ் நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசியக் கொடி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர் நலச் சங்கங்களுடன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பூக்கடை மார்கெட் மற்றும் பாண்டி பஜார் மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேசிய கொடி தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story